குலதெய்வத்தை வசப்படுத்த ஆன்மீக ரீதியான வழி இருக்கிறதா ?
காலமும் சூழ்நிலையும் நேரமும் நமக்கு சாதகமாக இல்லாத சமயத்தில் நம்முடைய வழிபாட்டு முறைகளில் சின்ன மாற்றங்களை கொண்டு வருவதில் தவறொன்றும் கிடையாது.
வீட்டு குல வழக்கப்படி குல தெய்வத்தை வழிபாடு செய்து, இந்த தீபத்தையும் கூடவே ஏற்றவேண்டும். இது நம்முடைய கஷ்டத்திற்கு உடனடியான தீர்வினை தேடித்தரும்.
கஷ்டத்தில் இருந்தாலும் நஷ்டத்தில் இருந்தாலும் சந்தோஷமாக இருந்தாலும் வருடத்திற்கு ஒரு முறை குலதெய்வ தரிசனம் செய்ய மறந்துவிடாதீர்கள். வளர்பிறையில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அல்லது வெள்ளிக் கிழமைகளில் குல தெய்வத்தை வழிபாடு செய்யலாம்.
கோவிலுக்கு செல்வதற்கு முன்பே உங்களுடைய வீட்டில் இந்த மண் அகல் விளக்கை நீங்கள் தயார் செய்து எடுத்து செல்லவேண்டும். புதியதாக ஒரு மண் அகல் தீபத்தை வாங்கிக் கொள்ள வேண்டும்.
கொஞ்சமாக மஞ்சள்தூள், புனுகு, கோரோசனை, ஜவ்வாது, இந்த பொருட்களோடு பன்னீர் ஊற்றி நன்றாக குழைத்து, அந்த அகல் விளக்கில் முழுவதும் தடவி நிழலிலேயே உலர வைத்துக் கொள்ளுங்கள். தாமரை திரி அல்லது வாழைத்தண்டு திரி இந்த இரண்டு திரியையும் ஒன்றாக திரித்து கொஞ்சமாக பன்னீரில் நனைத்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும்.
குலதெய்வ கோவிலுக்கு வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை செல்லும்போது, குலதெய்வத்திடம் உங்களது தீராத கஷ்டத்தை சொல்லி, அந்த கஷ்டம் தீர வேண்டும் என்று இந்த தீபத்தில், சுத்தமான பசு நெய் ஊற்றி, உங்கள் கையால் தயாரித்த திரியைப் போட்டு தீபச்சுடரை ஏற்றினால் போதும். தீராத கஷ்டங்களுக்கு கூடிய விரைவில் நல்ல விடிவு காலம் பிறக்கும். இதை குலதெய்வம் வசிய தீபம் என்றும் சொல்லலாம்.
குலதெய்வ கோவிலுக்கு உடனடியாக செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே இந்த தீபத்தை, குலதெய்வத்தை வேண்டி குலதெய்வத்தின் திருவுருவப் படத்திற்கு முன்பாக ஏற்றி வரலாம்.


0 கருத்துகள்